உங்கள் அலுவலகமும் இப்படியா?

Sunday, December 27, 2009




சமீபத்தில் எனக்குவந்த மின்னஞ்சல் என் அலுவலகத்தை தெளிவாகப் பிரதிபலிப்பதாக உணர்ந்தேன். அலுவலகத்தில் அனைவரையும் கவர்ந்த இது உங்களையும் கவரும்  என எதிர்பார்க்கிறேன்.




 

நிர்வாகப் பிரிவு

 

வாடிக்கையாளர் சேவை

 

சந்தைப்படுத்தல் பிரிவு

 
 வலைத்தொடர்பாடற் பிரிவு

 

மனிதவளப் பிரிவு

 
 உயர் முகாமைத்துவப் பிரிவு

 

பாதுகாப்புப் பிரிவு

 

தகவற் தொழில்நுட்பப் பிரிவு

 


தொடர்பாடற் பிரிவு

 

 விற்பனைப் பிரிவு

Read more...

நீங்களும் பாருங்களேன்!!உண்மையா?

Thursday, December 24, 2009

இது எனக்கு e-mail இல் வந்தது,யாம் பெற்ற இன்பம்!
பார்க்க நீங்களும்!



Read more...

ஒரு புது வெடி?!...

Friday, December 18, 2009













அன்று ஒரு ஞாயிற்றுக்கிழமை, வேலையும் இல்லை. வகுப்புகளும் இல்லை. மழையும் பெரிசா இல்லை. மழை என்றால் வீட்டில போத்தி மூடிக்கொண்டு படுக்கலாம் எண்டிருந்தன். அப்ப சுபாங்கன் சொன்னது ஞாபகம் வந்தது. பதிவர் சந்திப்பு எண்டு ஒன்று நடக்குது என்று. ஒன்றரை வருடமாக பதிவுகள் எழுதுபவர்களை படித்து வருகிறேன். ஒரு வருடத்துக்கு முதல் நானும் ஒரு பிளாக்கை உருவாக்கிவிட்டு என்ன எழுதுவது என்று தெரியாமல் இருந்தேன். நேரம் இல்லை என்று பொய் சொல்லிக்கொண்டு ஒண்டுமே எழுதாமல் விட்டாச்சு.



 மழை குறைவெண்டதால வீட்டுக்குள்ள பயங்கர வெக்கை. தலை வேற விறைச்சுக்கொண்டிருந்துது. நான் லோஷன், சுபாங்கன், புல்லட் தொடங்கி, கோபி, பவன் வரைக்கும் வாசிச்சிருக்கிறன். அதால வருகிறாக்களை ஒருக்கா பாப்பம் எண்டும் போனா சாப்பிடக் குடிக்க ஏதாவது கிடைக்கும் எண்டும் ஏற்பாட்டுக்குழு மேல இருந்த நம்பிக்கேல போவம் எண்டு முடிவெடுத்தன்.



அங்க போகேக்கையே கொஞ்சம் பிந்திப்போச்சு. அறிமுகப்படுத்தவேண்டிய தேவை இருந்ததாலயும், முதலாவது பதிவர் சந்திப்பைப்பற்றி வாசிச்சிருந்ததாலயும் சொல்லுறதுக்கு ஒண்டும் இல்லாத்தால அறிமுகத்தைத் தவிர்க்கிறதுக்கு நினைச்சிருந்தன். சரி அங்க போய் நிம்மதியா நித்திரை கொள்ளுவம் எண்டு பாத்தா ஆரம்பத்திலயே வெடி, வேடிக்கை, கடி, கருத்து எண்டு ஆரம்பித்துவிட்டது. என்னை அறியாம எனக்குள்ளயும் ஒரு ஆர்வம் வந்தது. அடுத்த சந்திப்புக்கு வரேக்கை ஒரு வாசகனாக மட்டும் இல்லாம பதிவராக வரவேண்டுமெண்டு நினைத்துத் தொடங்கியதுதான் இந்தப்பதிவு.



உண்மையாகவே அண்டைக்கு கலந்து உரையாடப்பட்ட விசயங்கள் ஈர்க்கும்படி இருந்தது. இனிப் பதிவெழுதுறதுக்கு அது பயன்படும் எண்டு நினைக்கிறன். பதிவுலகத்தில பழந்தின்று தோல் எறிஞ்சுகொண்டு இருக்கிற சில பெரிய தலைகளை நேரில சந்திக்கக் கிடைச்சது கொஞ்சம் சந்தோசமாகத்தான் இருந்தது. முதலாவது பதிவிலயே நீட்டி முழக்கக்கூடாது.  போற போக்கில கண்டது, கேட்டது, உணர்ந்தது போன்ற சில விசயங்களை கிறுக்கிக் கிழிச்சுப் போடலாம் எண்டு பதியத் தொடங்கிட்டன்.







Read more...

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP