கண்ணாமூச்சிக்கொலை

Monday, January 24, 2011


அலுத்து களைத்து-உறங்கமுற்படுகையில்
வருகிறாள் அவள்!
ஹாய் டா!-பரிட்சயமான குரல்
என்னடி?!-கண் மூடியபடி நான்
இல்லை உன்னுடன் கண் கட்டி விளையாடி
ரொம்ப நாளாகிறது!
ஆமாம் சிறுவயது முதல் அவள்
என் தோழி-யாரவள்?!
களைப்பு-கண் மூடியபடி நான்
ஆனால் அவளும் நானும்
நினைவு தெரிந்த நாள் முதல்
பழகிய உணர்வு
விளையாடுவோமா?-அவள்
அதுக்கென்ன -ஆனால் ஒரு நிபந்தனை
கட்டிலில் மட்டுமே நானிருப்பேன்
தொட்டுவிடும்  தூரத்தில் நீ ஒழி
தொட்டுவிடுவேன்!
சோர்வு-கண்மூடியபடி நான்
இன்னமும் நீ சொம்பேறியடா!
ஆம் அது உண்மைதான்
 "இன்னமும்" தெரிந்து வைத்திருக்கிறாள்
கண்களைக்கட்டவா?-அவள்
செய்வதை செய் வதைக்காதே
தூங்கப்போகும் நேரம்
கண்ணாமூச்சி தேவையா?
அயர்ச்சி-கண்மூடியபடி நான்
எதோ எடுத்தவள் கட்டுகிறாள்
கண்களை இறுக்கி
கட்டி முடித்தவள் காதருகில்
இப்ப ஆரம்பிப்போமா?- என்றவள்
விட்டம் பார்த்து உறங்க நினைத்த
என்மார்பின் மீது உட்கார்கிறாள்
எனது கைகளை அவளது கால்களால்  இறுக்கி
கன்னத்தில் கைவைத்து
எப்படி சுகம்? என்கிறாள்
ஆம் அவள் எனது தோழி
அந்த உடற் சூடு எனக்கு தெரிந்தது
சிறுவயதில் "மானே தேனே கட்டிபுடி"
பாட்டிற்கு என்னுடன் ஆடியவளாக
 இருக்கலாம்!பெயர் உருவம் நினைவில்லை
ரொம்ப வளர்ந்துவிட்டிருக்கிறாள்
அவளது கனம் மூச்சை முட்டுகிறது
சோர்வு குறைந்து நான் அவளிடம்
யார் நீ-என்கிறேன்
"நீ எனக்கு செய்த வேலைக்கு
நான் தருகிறேன் பரிசு"-என்றவள்
கன்னத்தி இருந்த கையை
கழுத்தில் வைத்து இறுக்குகிறாள்
அவளது அழுத்தில்
கத்தமுடியவில்லை!
கொலை செய்கிறாள் எனை!
மரணிக்கிறேன் நான்-
கண்களை மூடியபடி!
கடிசிவரை அவள் யாரென்று
தெரியாமலே!

தொடர்ச்சி ....

மரணித்த எனை விடுவித்து  அவள்
செல்கையில்
விழுந்த எனது கை சுவற்றில் பட்டு
கண்விழித்த நாள்
இன்றுவரை சிந்திக்கிறேன்
கனவில் எனை கொலைசெய்த
தோழி-யார்?

Read more...

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP