யன்னல் கரை சீட்

Tuesday, December 14, 2010

அதுவும் ஒரு வழமையான நாள்தான்!




காருக்குள்ள இருந்தவ கொண்டுவந்த -சாப்பாட்டை
சாப்பிட்டு கை கழுவுவி முடிச்சிப்போட்டா
பார்சல் பேப்பரையும் வெளியிலை எறிஞ்சுபோட்டா!

தையல் கடையிலை ஒருத்தர்
புது துணியை குடுத்து ஜீன்ஸ் தைக்க
அளவு குடுத்து முடிஞ்சிட்டுது!

சின்னா பொடியன் ஒருத்தன்
வாங்கின ஐஸ் கிரீம் முழுதும்
சாப்பிட்டு முடிச்சுப்போட்டான்!

பிச்சைக்காரன் பத்த வைச்ச பீடி -இரண்டு
பத்தி பத்தி ஊதித்தள்ளி முடிஞ்சுபோட்டுது!

கராஜிலை கொண்டுவந்து விட்ட
காத்து போன மோட்டார் சைக்கிள்
ஓட்டுவேலையும் சரியாகிட்டுது!

அழுத பிள்ளையும் பாலை குடிச்சுப்போட்டு
சிரிச்சு விளையாடி பிறகு
நித்திரையாகிபோச்சு!

பக்கத்திலை ஒருத்தி
கொண்டுவந்த புத்தகத்தில்
பாதிக்கு மேல படிச்சிட்டா!


காதுகளிலை மாட்டியிருந்த
ஹெட் செட் இல் கேட்ட fm இல்
கிட்டத்தட்ட மூண்டு பாட்டு
முடிஞ்சுது வளம்பரமும் சேத்து!


அசையாமல் நிக்குது பஸ்
சிவப்பு மஞ்சள் பச்சையும்
கனதரம் மாறிட்டுது!
யாரோ ஒரு வி ஐ பி போறாராம்
ரோட்டிலை!

திட்டுது சனம் அவரை
ஹெலிஹோப்டரிலை போகலாம் எண்டு!

எல்லாம் கேக்குது கொஞ்சம்!
ஆனா  நான் கேக்காதமாதிரி
பாட்டுக்கு மண்டையை ஆட்டியபடி,
ஜன்னல் கரை சீட்டிலை-நான்.

12 comments:

Jana December 14, 2010 at 9:26 PM  

யன்னல்கரை சீட்... பலகதைகளை சொல்லிவிட்டதே..அருமை S.M.S.R.

Bavan December 14, 2010 at 9:38 PM  

அருமை, நல்லாயிருக்கு..:D

Subankan December 14, 2010 at 9:58 PM  

நாளாந்த நிகழ்வுகள் கவி வடிலில்! அருமை!!

S.M.S.ரமேஷ் December 14, 2010 at 10:22 PM  

Jana said...
நன்றி ஜனா!
வருகைக்கும் கருத்திற்கும்!

S.M.S.ரமேஷ் December 14, 2010 at 10:23 PM  

Bavan said...

நன்றி பவன்!
வருகைக்கும் கருத்திற்கும்!

S.M.S.ரமேஷ் December 14, 2010 at 10:25 PM  

Subankan said...

//நாளாந்த நிகழ்வுகள் கவி வடிலில்! அருமை!!//


நன்றி சுபங்கன்!
வருகைக்கும் கருத்திற்கும்!

S.M.S.ரமேஷ் December 14, 2010 at 10:26 PM  

யோ வொய்ஸ் (யோகா) said...

// நல்லாயிருக்கு//


நன்றி யோ வொய்ஸ் (யோகா)!
வருகைக்கும் கருத்திற்கும்!

VELU.G December 14, 2010 at 10:37 PM  

நல்லாயிருக்குங்க

S.M.S.ரமேஷ் December 14, 2010 at 10:41 PM  

@ VELU.G said...

//நல்லாயிருக்குங்க//

நன்றி VELU.G!
வருகைக்கும் கருத்திற்கும்!

ம.தி.சுதா December 14, 2010 at 11:58 PM  

அருமையாக ரசித்து வடித்துள்ளிர்கள்...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

S.M.S.ரமேஷ் December 15, 2010 at 12:02 AM  

@ ம.தி.சுதா said...

//அருமையாக ரசித்து வடித்துள்ளிர்கள்...//

நன்றி அன்பு சகோதரா!
வருகைக்கும் கருத்திற்கும்!

Post a Comment

  © Blogger template The Beach by Ourblogtemplates.com 2009

Back to TOP